×

மயான பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு

நெய்வேலி, அக். 17:  நெய்வேலி அடுத்து வடக்குத்து ஊராட்சியில் உள்ள மேல்வடக்குத்து ஆதிதிராவிடர் பகுதியில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இது குறித்து அப்போது வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ஜெகனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கிராம சபை மற்றும் ஊராட்சி மன்றத்தில் பாதைக்காக நில உரிமையாளர்களிடம் பேசி நில ஆர்ஜிதம் செய்ய ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட வருவாய் துறை நடவடிக்கை எடுத்தது. மயான பாதை அமைத்து செயல்படுத்திட 2014ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர் ஆட்சியர் பரிந்துரையின் பேரில் மேல்வடக்குத்து பகுதியை மயான பாதைக்கான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாகிருபாகரன் ஆய்வு செய்தார். அப்போது தனி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர் விஜயா, வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags : graves ,
× RELATED 7 இடங்களில் மயான சாலைகளை தார் சாலையாக மாற்ற கிராம சபை கூட்டத்தில் முடிவு