×

போச்சம்பள்ளி சந்தையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பால் சுகாதார சீர்கேடு

போச்சம்பள்ளி, அக்.17:  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தமிழகத்தில் இரண்டாவது ெபரிய சந்தையாக திகழ்வது போச்சம்பள்ளி வாரச்சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை கூடுவது வழக்கும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாக, கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வருவர். தமிழகத்திலேயே தங்கம் விற்கப்படும் ஒரே சந்தை என்றால் அது போச்சம்பள்ளி சந்தை மட்டுமே. போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டி பஞ்சாயத்தில் குவியும் குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் அள்ளிசென்று போச்சம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் மலைபோல் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதில் பிளாஸ்டிக் பைகள் எரியூட்டும்போது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பர்கூர் பிடிஓ அலுவலகத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் தரப்பில் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்கிலேயே உள்ளனர். ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து போச்சம்பள்ளி-மத்தூர் சாலையில் மக்கள் மறியல் செய்தனர். அங்கு வந்த பிடிஓ சந்தையில் குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படும் என உறுதியளித்தார். ஆனாலும் தொடர்ந்து குப்பை கொட்டிய வண்ணம் உள்ளனர். இதனால் பன்றிகள் தொல்லையும், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் வாரச்சந்தை முழுவதும் சகதிகாடாகவும், துர்நாற்றம் வீசியபடியும் உள்ளது. பென்னாகரம் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக சந்தையை தூய்மைப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...