×

ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு

போச்சம்பள்ளி, அக்.17: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் செண்டுமல்லி, குண்டுமல்லி, ரோஜா, சாமந்தி, பட்டன் ரோஸ், கனகாம்பரம் உள்ளிட்ட மலர்கள் சாகுடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரையில் பண்டிகைகள் வரிசையாக தொடர்ந்து வருவதால் இம்மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக பூக்களின் விலை அதிகப்படியாக இருக்கும்.
நாளை (18ம் தேதி) ஆயுத பூஜை, 19ம் தேதி விஜயதசமி பண்டிகை வருவதால் பூக்கள் விலை நேற்றில் இருந்தே பல மடங்கு உயர்ந்து விட்டது.  கடந்த வாரம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செண்டுமல்லி, 80 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 200 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்ற பட்டன்ரோஸ் 150 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்ற கோழிகொண்டை பூ 50 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்ற அரளி 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

Tags : pooja ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை