×

உர விலை உயர்வு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, அக். 17: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஜிஎஸ்டி வரியால் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள உரவிலையை குறைக்க வேண்டும். படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலை இருந்து கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி மற்றும் இந்த ஆண்டு கரும்பு வெட்டிய தொகை உள்ளிட்டவற்றை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தண்டியப்பன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை