விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை தேவை பார்வர்டு பிளாக் வேண்டுகோள்

மதுரை, அக். 17: விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வல்லரசு பார்வர்டு பிளாக் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய வல்லரசு பார்வர்டு நிறுவன தலைவர் அம்மாவாசி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தென்தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கால்வாய்கள், வரத்துக்கால்வாய்கள் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால், விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறிப்பாக மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளானார்கள். பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் விவசாயத்திற்கு கிடைக்காத நிலை உள்ளது. பயிர் செய்த விவசாயிகள், அறுவடை செய்ய முடியாமலும், பயிர் செய்ய தயார் நிலையில் உள்ள விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமலும் வேதனையில் உள்ளனர். உடன் விவசாயிகளின் கண்ணீரையும், பொதுமக்கள் படும் துயரங்களையும் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: