×

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வு பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

நாகர்கோவில், அக்.17 : பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டு உள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார். பன்றி காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் உள்ளதா? என்பதை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பன்றி காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் விளக்கினர். பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது : குமரியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ேவகமாக பரவி வருகிறது. குறிப்பாக நாகர்கோவிலில் 2 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன். போதிய மருந்துகள்  உள்ளதாக டாக்டர்கள் கூறினர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்தனர். நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் ெகாசு உற்பத்தி அதிகரித்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் முறையாக சுத்தம் செய்வதில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். கொசுக்களை ஒழிக்க முறையாக புகை மருந்து அடிக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் திமுக நகர செயலாளர் வக்கீல் மகேஷ், நிர்வாகிகள் சவுந்தர், மணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags : Suresh Rajan MLA ,spread ,state ,
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...