×

சிகுளம்- தல்லாகுளம் வரை நீடிப்பு தீபாவளி நெருங்குவதால் ‘சரக்கு’ இருப்பு வைக்க உத்தரவு

மதுரை, அக். 17: தீபாவளிக்கு பண்டிகைக்கு மதுபானங்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வரும் நவ. 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை நகர்(வடக்கு) பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்பு உள்ளதா என்று மாவட்ட மேலாளர் முருகானந்தம் திடீர் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, ‘தீபாவளி நெருங்குகிறது. தீபாவளிக்கு முன்கூட்டியே மதுபானங்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். எனவே குடோனில் இருந்து மதுபானங்களை இறக்கிக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களிடம் சரக்கு இல்லை என்று கூறக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து பணியாளர்கள் சிலர் கூறுகையில் “மதுபானங்களை முன்கூட்டிேய இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மதுப்பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சில கம்பெனி சரக்குகள் தற்போது வருவதில்லை. அந்த குறிப்பிட்ட சரக்குகளையும் கடைகளுக்கு தட்டுப்பாடின்றி அனுப்பினால் விற்பனை அதிகரிக்கும்’ என்று தெரிவித்தனர். நெருக்கடிக்கு விமோச்சனம் நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, “தேசிய நெடுஞ்சாலை துறை அமைக்கும் பறக்கும் பாலமும், மாநில நெடுஞ்சாலை துறை உருவாக்க திட்டமிட்டுள்ள உயர்மட்ட பாலம் தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில் இணையும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோரிப்பாளையம் நெருக்கடிக்கு விமோச்சனம் பிறக்கும்” என்றார்.


Tags : Diwali ,Sikulam-Thalakulam ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது