×

18, 19 வயது நிரம்பியவர்கள் குமரியில் 16,877 இளம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம்

நாகர்கோவில், அக்.17: குமரி மாவட்டத்தில் 18, 19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் 16 ஆயிரத்து 877 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்ப இருப்பவர்களும் பட்டியலில் சேர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் நிறைவு பெற்றபோதிலும் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
 மாவட்டத்தில் மொத்தம் 615 வாக்குப்பதிவு மையங்களில் 1,694 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து 31ம் தேதி வரை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளம் வாக்காளர்கள் பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். சிறப்பு முகாம்கள் வாயிலாக 16 ஆயிரத்து 877 பேர் இளம் வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18, 19 வயது நிரம்பியவர்கள் ஆவர். இவர்கள் உட்பட மொத்தம் 28 ஆயிரத்து 188 பேரிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : applicants ,voters ,Kumari ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...