×

2 வது முறையாக போட்டியின்றி தேர்வு குமரி மாவட்ட பால் வள தலைவராக அசோகன் மீண்டும் பொறுப்பேற்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - தளவாய்சுந்தரம் பங்கேற்பு

நாகர்கோவில், அக்.17 : குமரி மாவட்ட பால்வள தலைவராக 2 வது முறையாக எஸ்.ஏ. அசோகன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் ராேஜந்திரபாலாஜி, தளவாய்சுந்தரம்  ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். குமரி மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பால் வள தலைவருமான எஸ்.ஏ. அசோகன் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியினர் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில் எஸ்.ஏ. அசோகன் 2வது முறையாக பால் வள தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆவின் அலுவலகத்தில நடந்த பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அசோகன் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை எஸ்.ஏ.அசோகனிடம் வழங்கினர். இதில் எஸ்.பி. நாத், ஆவின் பொதுமேலாளர் தியானேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆவின் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு வரவேற்றார். பால்வள தலைவர் எஸ்.ஏ. அசோகன் ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசுகையில், மாவட்ட பால்வள தலைவராக 2 வது முறையாக எஸ்.ஏ. அசோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு மாநில பால் வள தலைவராக பொறுப்பு வழங்க வேண்டும் என தளவாய் சுந்தரம் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் அந்த பொறுப்புக்கு வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். ஆனால் இதை நான் மட்டும் செய்ய முடியாது. தளவாய் சுந்தரமும் அதற்கான முயற்சி எடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் சி.என். ராஜதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், பாசறை செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் வக்கீல் சுந்தரம், பொன். சுந்தரநாத், சுகுமாறன், சந்துரு, விக்ரமன், ரயிலடி மாதவன், கோபாலகிருஷ்ணன், கார்மல் நகர் தனிஸ், இ.என்.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ashokan ,Minister ,Kumari District ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...