மதுரை - பழனி ரயில் கோவை வரை நீட்டிப்பு

மதுரை, அக். 17: மதுரை - பழநி - மதுரை பயணிகள் ரயில்(வண்டி எண் 56710/56709) சேவை  கடந்த 15ம் தேதி வரை, கோவை வரை நீட்டிக்கப்பட்டது. பழநி - கோவை - பழநி பயணிகள் சிறப்பு ரயில்களாக (வண்டி எண் 06710/06709) இயக்கப்பட்டது.  இந்த மதுரை - பழநி - மதுரை பயணிகள் ரயில்களின் சேவை பயணிகள் வசதிக்காக மேலும் 3 மாதங்களுக்கு கோவை வரை நீட்டிக்கப்பட்டு வரும் 15.1.2019 வரை பழனியிலிருந்து சிறப்பு ரயில்களாக இயக்கப்படும். இத்தகவல் தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: