×

மதுைர அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு

மதுரை, அக். 17:  மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதித்து நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தால் வெண்டிலேட்டருடன் கூடிய தனி வார்டு சிகிச்சைக்காக தயார் நிலையில் இருப்பதாக டீன் மருதுபாண்டியன் தெரிவித்தார். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்திற்குள் இக்கிருமிகள் புகுந்து விடாமல் இருக்க, சுகாதாரத்துறை உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்தாண்டு, டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டும், 50க்கும் மேற்பட்டோர் இறந்து போன நிலையில், மீண்டும் காய்ச்சல் பாதித்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று முன்தினம் பழனி அருகே உள்ள வில்வாதம்பட்டியை சேர்ந்த ரேசன் கடை விற்பனையாளர் மணிகண்டன்(46) பன்றிக் காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
தென்மாவட்டங்களின் தலைமை மருத்துவமனையான மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தொற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என்று டீன் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ``மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை ெபறுபவர்களில், பன்றிக் காய்ச்சலுக்கான ஹெச்1என்1 கிருமிகள் யாருக்கும் இல்லை. மேலும் டெங்கு அறிகுறியும் இல்லை. இந்த அறிகுறிகளுடன் நோயாளிகள்  வந்தால், அவர்களுக்கு வெண்டி லேட்டர் வசதியுடன் தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. தேவையான மருத்துவர்களும் போதுமான மருந்துகளும் உள்ளது’’ என்றார்.

Tags : Madurai Government Hospital ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன...