40 சதவீத போனஸ் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், அக். 17: டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கடைகளில் விற்பனைக்கு ஏற்ப பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிநிரந்தரம், பொது பணியிட மாறுதல், 40 சதவீத போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் அந்தந்த தலைநகர்களில் நடைபெற்று வருகிறது.அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் ராமு, கௌரவத் தலைவர் மகாமுனி தலைமை தாங்கினார்.

மாநிலக்குழு உறுப்பினர் கோபால் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். வேடசந்தூர் தாலுக்கா நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: