×

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

திருச்சி, அக்.16:  30 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்களில் ஒரு பகுதியினர் காலவரையற்ற போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்ட த்தில் 300 கடைகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கான படியை உயர்த்தி வழங்க வேண்டும். ரேஷன் அட்டைகளுக்கு ஏற்ப பொருட்கள் வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதையடுத்து ரேஷன் கடை ஊழியர்களின் ஒரு பகுதியினர் மட்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து அரசுக்கு நோட்டீசும் அனுப்பினர். ஆனால் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அதனால் திட்டமிட்டபடி நேற்று (திங்கள்) காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்று தமிழ்நாடு ரேஷன் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 1,500 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. மாநகரில் சிந்தாமணி, அமராவதி கூட்டுறவு அங்காடியின்கீழ் உள்ள 300 கடைகளும் நேற்று திறக்கப்பட்டிருந்தது. துறையூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கிராமப்புற மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். மண்ணச்சநல்லூர் தாலுகாவில் 96 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 20 கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் ஊழியர்கள் தாலுகா அலுவ லகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் பிரசன்னா, இணை செயலாளர் பிரகாஷ் மற்றும் 4 பெண்கள் உள்பட 20 பேர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் புறநகர் பகுதிகளில் ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அண்ணாத்துரை கூறுகையில், வேலை நிறுத்த போராட்டத்தில் 3வது நாள் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை