×

கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு கருவிகள் முதல்நிலை பரிசோதனை முகாம்

திருச்சி, அக்.16: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் பரிசோதனை முகாம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று துவங்கியது. மொத்தம் 4 நாட்கள் பரிசோதனை முகாம் நடக்கிறது. திருச்சி கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை பரிசோதனை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் கலெக்டர் ராஜாமணி அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளன. அதன்படி திருச்சி மாவட்டத்திற்கு 6,340 வாக்குப்பதிவு கருவிகளும், 3,440 கட்டுப்பாட்டு கருவிகளும் வரப்பெற்றுள்ளன. வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1,720 , கலெக்டர் அலுவலகத்தில் 1,720 கருவிகளும் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூர் பெல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு ரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் இருப்பு வைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் முதல்கட்டமாக சென்ற வாரம் 8.10.2018 முதல் 13.10.2018 வரை மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. இன்று (நேற்று) முதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் முதல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இச்சோதனையானது நான்கு நாட்கள் நடை பெறும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியில் பெங்களூர் பெல் நிறுவனத்தை சேர்ந்த 6 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இப்புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிய வரும்.  தாங்கள் வாக்களித்த சின்னம் மற்றும் வேட்பாளர் பெயரை 7 வினாடிக்குள் பார்த்துக் கொள்ள முடியும். பின்னர் அந்த சீட்டு வாக்காளர் சரிபார்ப்பு கருவி பகுதியில் சேர்த்து வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது கட்டுப்பாட்டு கருவி பழுதடைந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ வாக்காளர் சரிபார்ப்பு கருவியில் சேகரிக்கப்பட்டுள்ள சீட்டுகள் எண்ணப்படும்.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இன்று முதல் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் மனுக்கள் அளிக் கலாம். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தா

Tags : Recording Tools Primary Testing Camp ,Office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...