மண்டல அளவிலான குழு விளையாட்டு போட்டி

மண்ணச்சநல்லூர், அக்.16: சமயபுரத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டி, கையுந்துப்போட்டி, கூடைப்பந்து போட்டி, கைப்பந்து போட்டி உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  போட்டிகளை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விமலா முன்னிலை வகித்தார். போட்டிகளில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 1,100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மண்டல அளவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: