தா.பேட்டை அருகே வடமலைப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தா.பேட்டை, அக்.16:  தா.பேட்டை அடுத்த வடமலைப்பட்டி பாசன ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்துறையினர் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

தா.பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட வடமலைப்பட்டி கிராமத்தில் பாசன ஏரி அமைந்துள்ளது. சுமார் 106 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் போது வடமலைப்பட்டி, பிள்ளாதுறை, கரிகாலி, கொழிஞ்சிப்பட்டி, ஊருடையாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் நேரிடையாகவும். மறைமுகமாகவும் பயன்பெறுகிறது. இந்த ஏரியில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக முசிறி ஆர்டிஓவிற்கு புகார் வரப்பெற்றது.

இதையடுத்து ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமையில் தாசில்தார் சுப்ரமணியன், துறையூர் பொதுப்பணித்துறை அரியாறு கோட்ட அலுவலர்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றி கரை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  தா.பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: