மணப்பாறை அருகே கார் மோதி விவசாயி பலி

மணப்பாறை, அக்.16: மணப்பாறை அருகே மருங்கா புரி அடுத்த அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(48). விவசாயி. இவர் நேற்று காலை எலுமிச்சை பழம் மூட்டையை டூ வீலரில் எடுத்து வந்து மணப்பாறை மார்க்கெட்டில் இறக்கிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். லஞ்சமேடு கைக்காட்டி அருகே சாலையை கடக்க சென்டர் மீடியனில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் சாலையை ஒருவர் கடந்தால் கட்டுப்பாட்டை இழந்து முருகேசன் மீது மோதியதில் அவர் இறந்தார்.மேலும் சாலை யை கடந்த தங்கப்பா, காரில் வந்த 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: