உலக கைகழுவும் தினம் மன்னார்குடி நகராட்சி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார்குடி, அக். 16: உலக கைகழுவும் தினத்தையொட்டி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மன்னார்குடி நகராட்சி பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கான விழிப் புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது. உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15ம்தேதி உலக கைகழுவும் தினம் அனுசரிக்கப் படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் அறிவுறுத் தலின் பேரில் மன்னார்குடி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உலக கை கழுவும் தினத்தையொட்டி மாணவ மனவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர்  தேவி தலைமை வகித்தார். கோட்டூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சவுந்தரராஜன் பள்ளி குழந்தைகளுக்கு சோப்பினால் கை கழுவும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது  அவர் பேசுகையில்,உணவருந்தும் முன்னரும், கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். உலகில் பல நோய்கள் சுகாதார இன்மையினால் வருகிறது.

சோப்பினால் கை கழுவது மூலம் கோடிக்கான வைரஸ்கள், லட்சக்கணக்கான பாக்கிடிரியாக்கள் அழிக்கப் படுகிறது. இவற்றில் 50 சதவீதம் வயிற்று போக்கு நோயும், 25 சதவீதம் நிமோனியா நோயும், மீத முள்ள 25 சதவீதம் மஞ்சள் காமாலை, தோல் மற்றும் கண்நோய்கள் போன்ற வை ஏற்படுகிறது. சுகாதாரயின்மைனால் பெரியவர்களை விட அதிகம் பாதிக்கப்படுவது எளிதில் நோய் தொற்றக்கூடிய குழந்தைகளே என்றார். மன்னார்குடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மணாழகன் மாணவ மாணவியர்களுக்கு  சோப்பினால் கை கழுவது குறித்து செய்முறை செய்து காண்பித்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள சுமார் 220 மாணவர்கள் ஒரே நேரத்தில் சோப்பு திரவத்தில் கை கழுவினர்.

× RELATED மன்னார்குடி மேலகண்டமங்கலத்தில் 100...