×

மாணவிகளுக்கு பிரச்னைகள் அஞ்சல் அட்டையில் புகார் தெரிவித்தால் உடன் நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி, அக்.16: மாணவிகளுக்கு பிரச்னைகள் இருந்தால் அஞ்சல் அட்டையில் புகார் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி விக்கிரமன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி விக்கிரமன் தலைமையில் நடைபெற்றது. டிஎஸ்பிசந்திரசேகர் முன்னிலைவகித்தார். தலைமையாசிரியை குமுதம் வரவேற்றார். இதில் எஸ்.பிவிக்கிரமன் மாணவிகளுக்கு அஞ்சல் அட்டை வழங்கி பேசுகையில் மாணவிகள்பள்ளிக்கு வரும் வழிகளில் மற்றும் பள்ளி வளாகத்திலும், வீட்டிற்கு அருகாமையில் பஸ்சில் போகும் போதும் பல்வேறு பிரச்னைகள்ஏற்படும் போது மாணவிகள் காவல் நிலையத்திலோ, ஆன்லைன் மூலமாகவோ புகார் தெரிவிக்க இயலாதநிலையில் வழங்கப்படுள்ள அஞ்சல் அட்டையில் புகார் தெரிவிக்கும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்டகாவல்துறை அலுவலக முகவரி அச்சிடப்பட்டதபால் கார்டுகள்அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு அதில் புகாரை எழுதிஅனுப்பினால் உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்கஅனைத்து காவல் நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்றார். இதில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், தனிப்பிரிவு எஸ்.ஐசத்யா, எஸ்.ஐ.வல்லவராணிமற்றும் பள்ளிமாணவிகள்,  ஆசிரியர்கள்மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...