×

எஸ்பி தகவல் திருவாரூர்- திருப்பூர், வேலூருக்கு 4 புதிய பேருந்துகள்

திருவாரூர், அக். 16: திருவாரூரிலிருந்து திருப்பூர் மற்றும் வேலூருக்கு 4 புதிய பேருந்துகளை அமைச்சர் காமராஜ் துவங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற  விழா ஒன்றில்  கடந்த 10ம் தேதி மாநிலம் முழுவதும் 471 புதிய பேருந்துகள் வழித்தடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். எனவே மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட 11 பேருந்துகளில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருப்பூருக்கு 3 புதிய பேருந்துகளும், மன்னார்குடியிலிருந்து வேலூருக்கு ஒரு புதிய பேருந்தும் என மொத்தம் 4 வழித்தடங்களில் 4 பேருந்துகள் அமைச்சர் காமராஜ் திருவாரூர் பேருந்து நிலையத்தில் கொடியசைத்து வைத்தார். எம்பி கோபால், கலெக்டர் நிர்மல்ராஜ், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ராஜ்குமார், கோட்ட மேலாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vellore ,Tirupur-Tirupur ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...