×

திருத்துறைப்பூண்டியில் முதலுதவி பயிற்சி முகாம்

திருத்துறைப்பூண்டி ,அக். 16: திருத்துறைப்பூண்டியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பாரதமாதா சேவைநிறுவனம், பள்ளங்கோவில் ஜான் டி பிரிட்டோ உயர் நிலைப்பள்ளி சார்பில் முதலுதவி குறித்து பயிற்சி முகாம் வர்த்தகர் சங்ககட்டிடத்தில் நடைபெற்றது. பாரதமாதா சேவைநிறுவனஇயக்குனர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார், ஜான் டி பிரிட்டோ உயர் நிலைப்பள்ளி தாளாளர் ஜான்பீட்டர் முன்னிலைவகித்தார். ரெட் கிராஸ் சொசைட்டி  கவுரவ செயலாளர் வரதராஜன் முதலுதவி சிகிச்சைபயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார். முதலுதவி பயிற்சியினைஅங்கீகரிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்றுநர் பெஞ்சமின்  பயிற்சியளித்தார். ரெட் கிராஸ் மாவட்டமக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் நன்றிகூறினார்.

Tags : training camp ,Tiruthuraipothy ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்