இசைக்கலை பெருமன்ற கூட்டம்

நீடாமங்கலம்,அக்.16: திருவாரூர் மாவட்டத்தில் கிராம புறங்களில் உள்ள இசை,நடன,பாடல் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழக இசைக்கலை பெருமன்ற கூட்டம் கொரடாச்சேரியில் நடத்தினர். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுர்ஜித் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் அருள்,மாவட்டச் செய்தி தொடர்பாளர் மருதன்,மூத்த பறை இசைக் கலைஞர் கொட்டையூர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்களாக அறிவுமணி, அத்திப்பூக்கள் மோகன்,கவுரவதலைவராக சுப்ரமணியன்,தலைவராக ஜெகதீசன்,பொருளாளராக சுரேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் கொரடாச்சேரி, வலங்கைமான்,குடவாசல் ஒன்றிய அளவிலான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

× RELATED ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்