×

ரேடியோதெரபி டெக்னீசியன் பணியிடம் பதிவை சரிபார்க்க இன்று கடைசி நாள்

கிருஷ்ணகிரி, அக்.16: ரேடியோதெரபி டெக்னீசியன் காலிப்பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாநில பதிவு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், ரேடியோதெரபி டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான பட்டியல் மாநில பதிவு அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான கல்வி தகுதி பிஎஸ்சி(ரேடியோதெரபி டெக்னாலஜி) படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்திருக்க வேண்டும். வயது 1.7.2018 அன்று எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி., பிசிஎம் ஆகியோருக்கு 37 வயதும், பொது பிரிவினருக்கு 30 வயதுமாக இருக்க வேண்டும். எனவே, இந்த கல்வி தகுதியுடையோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் இன்று (16ம் தேதி) மாலைக்குள் தங்களது பதிவினை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்