×

அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

ஊத்தங்கரை, அக்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 87வது பிறந்த நாள் விழா மற்றும் சர்வதேச கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். உலகில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்படுவது வயிற்றுப்போக்கு மூலம் என்பதால் அனைவரும் தமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். பின்னர் மாணவர்கள் அப்துல் கலாம் மற்றும் தூய்மை பாரதம் ஆகிய தலைப்புகளில் நடந்த கவிதை, பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்றனர். உதவி ஆசிரியர்கள் லதா, அப்துல்கலாம் குறித்து கருத்துரை வழங்கினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியர் திலகா நன்றி கூறினார். போச்சம்பள்ளி:  போச்சம்பள்ளி அருகே மத்தூர் கண்ணன்டஅள்ளி ராஜீவ் நகர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 87வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் வேடியப்பன் முன்னிலை வகித்தார். பயிற்றுனர்கள் முனிரத்தினம், நந்குமார், தேவன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லாவண்யா நன்றி கூறினார், விழாவில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன் சீருடைகள் வழங்கினார்.

Tags : Abdulkalam ,Birthday Celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...