×

காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த 2 நாய்கள் உடல் சிதறி பலி

சூளகிரி, அக்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளது. வனத்தையொட்டியுள்ள மேலுமலை, சின்னகுத்தி, பெரியகுத்தி, செட்டிப்பள்ளி, நெரிகம், சூளகிரி, கோபசந்திரம், பீர்ஜேபள்ளி, பிக்கனப்பள்ளி போன்ற வனத்தை ஒட்டிய கிராமங்களில், தற்போது கடலை, ராகி, தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. வனப்பகுதியில் வசிக்கும் காட்டுப்பன்றிகள் இரை தேடி, வனத்தையொட்டிய கிராம பகுதிக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.

இதை தவிர்க்க, சில விவசாயிகள் தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைப்பது, வெடி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சூளகிரி அருகே நேற்று முன்தினம் பிற்பகல், காமநாயக்கன்பேட்டை செல்லும் வழியில் உள்ள நிலத்தில், காட்டுப்பன்றி அட்டகாசத்தை ஒழிக்க நாட்டு வெடியை விவசாயிகள் மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். அவ்வழியாக சென்ற 2 தெருநாய்கள், தின்பண்டம் என நினைத்து அதை கடித்தன. அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்ததில், 2 நாய்களும் உடல் சிதறி பலியாகின. இதுகுறித்து வனத்துறையினரும், சூளகிரி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா