வரி உயர்வை கைவிட வலியுறுத்தி பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்

பேராவூரணி, அக். 16: பேரூராட்சி பகுதியில் பலமடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி, வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சித்திரவேல் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் சந்தானம், ஸ்டாலின் பிரபு முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார். சிபிஐ ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் 4வது வார்டுக்கு உட்பட்ட பாந்தக்குளம், அண்ணாநகர் பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் மின் வசதி, குடிமனை பட்டா வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். கடைமடை பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். ஆனந்தவள்ளி வாய்க்காலை மராமத்து செய்ய வேண்டும். பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலை பாலத்தை இடித்து புதிதாக கட்ட வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் எப்போதும் கிடைக்குமாறு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் ராஜமாணிக்கம், கோபால், ரவி, முருகேசன், நீலா, பாரதி நடராஜன் பங்கேற்றனர்.

Related Stories: