×

ஆலங்குடி பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

ஆலங்குடி, அக்.16: ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக தலைமை கழக அறிவிப்பின்படி வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பற்றிய பணியை ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள வேப்பங்குடி, திருவரங்குளம், மாங்கனாம்பட்டி, கைக்குறிச்சி, வல்லத்திராகோட்டை, கொத்தக்கோட்டை, மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும், அதேபோல், ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் திமுக தலைமை கழக அறிவிப்பின்படி வாக்காளர் சேர்த்தல், நீக்கம் குறித்த பணி நடந்தது. இதனை திமுக எம்எல்ஏ மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், திமுக மேலிடபார்வையாளர், மாவட்ட துணைச் செயலாளர் பழனியப்பன், கைலாசம், திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி, துணைச் செயலாளர்கள் மெய்யர், விவசாயி என்ற விஜயன், ஊராட்சி செயலாளர் முருகன், கே.வி.கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன், திருவரங்குளம் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், திருவரங்குளம் திமுக கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : camp ,area ,Alangudi ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு