×

கடத்தூர் பேரூராட்சியில் டெங்கு கொசு தடுப்பு விழிப்புணர்வு

கடத்தூர், அக்.16: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், மலைவாழ் நலத்திட்ட அலுவலர் சரவணன், கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம் ஆகியோர் இங்கு ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டனர். மேலும், குடிநீரில் குளோரின் கலப்பது தொடர்பாகவும், துப்புரவு ஊழியர்கள் பணி, வடிகால் சுத்தம் செய்யும் பணி,

வீடு, வீடாக குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. டெங்கு கொசு புழு ஒழிப்பு பணி, கொசு மருந்து அடிக்கும் பணி, 7வது வார்டில் பொதுக்கழிப்பிடம், குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல், கடத்தூர் ஆதிதிராவிட மாணவர் விடுதியை தூய்மையாக வைத்திருக்குமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். டெங்கு கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : town ,Kadathur ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது