×

ராம் கல்வி நிறுவனங்களில் மரக்கன்று நடும் விழா

அரூர், அக்.16: கம்பைநல்லூர் ராம் கல்வி நிறுவனங்களில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார்.
காரிமங்கலம் தாலுகா, பன்னிகுளம் ஊராட்சி வன்னிகுளம் கிராமத்தில் கம்பைநல்லூர் ராம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாம் பாய்ஸ் அமைப்பின் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு ராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன் தலைமை வகித்தார். மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் கோவிந்த், கோயம்புத்தூர் இந்துஸ்தான் கல்லூரி உதவி பேராசிரியர் மதிவாணன் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் தமிழ்மணி, கலாம் பாய்ஸ் அமைப்பின் தலைவர் அரவிந்த், ஊர்கவுண்டர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலாம் பாய்ஸ்அமைப்பின் செயலாளர் அசோக் வரவேற்றார்.

விழாவில் நடிகரும், பசுமை கலாம் அமைப்பின் நிறுவனருமான விவேக், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். அவர் ேபசுகையில், ‘மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டபடி, 10லட்சம் மரக்கன்றுகளை நட்டேன். பிறகு ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என கூறினார். அதன்படி, தமிழகம் முழுவதும் இன்றுவரை 31 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் மரக்கன்றுகளை வளர்க்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும்,’ என்றார்.விழாவில் கலாம் பாய்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் மகாலிங்கம், மணிகண்டன், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கொண்டனர்.

Tags : festivals ,institutions ,
× RELATED ஹோலி பண்டிகை கொண்டாட்டம்