×

அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் நியமிக்க கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

அரியலூர்,அக்.16: அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் நியமிக்க கோரி அப்பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம்  வி.கைகாட்டி அருகே நாகமங்கலம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 12ம் தேதி மாணவர்களுக்கு மதியம் சத்துணவு சாப்பாட்டுடன் முட்டை வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள் 14 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். இதையடுத்து நேற்று சத்துணவு அமைப்பாளர் இல்லாததால் இது போன்று சம்பவம் நடப்பதாகவும், உடனடியாக சத்துணவு அமைப்பாளர் நியமிக்க வேண்டும், தரமான சத்துணவு, முட்டை வழக்க வேண்டும் என கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் நாகமங்கலத்தில் விக்கிரமங்கலம்-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர்உசேன் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சத்துணவு அமைப்பாளர் அமைக்கப்படும், அதுவரை பொறுப்பு சத்துணவு அமைப்பாளர் பணியாற்றுவார் என கூறியதை தொடர்ந்து சாலைமறியல் கைவிட்டனர். சாத்தனூர் கல்மர பூங்கா சாலையை சீரமைக்க வேண்டும்
பெரம்பலூர்.அக்.16: சாத்தனூர் கல்மர பூங்காவிற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று  பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், குன்னம் தாலுகா, பேரளி, வடக்கு தெருவை சேர்ந்த சமூகஆர்வலர் ராகவன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பலகோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த சாத்தனூர் கல்மர பூங்காவில் உள்ள கல்மரத்தை பார்வையிட நாள்தோறும், சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.

கல்மர பூங்காவிற்கு செல்லும் சாலை இன்னும் சீரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமைகளில் முதன்மையான சாத்தனூர் கல்மர பூங்காவிற்கு அருகே சுற்றுலா பயணிகள் மாளிகை, அருங்காட்சியகம் ஆகியவற்றோடு தற்போது அம்மா பூங்கா, அம்மா ஜிம் ஆகியன அறிவித்து கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அவற்றைக் காணச்செல்லும் சாலை தரமானதாக இருக்க வேண்டும் என்பதால் அந்த சாலையை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும்.

Tags : storm protesters ,nutrition organizer ,government school ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...