×

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்,அக்.16: அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி பெரம்பலூரில் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் இளைஞர் எழுச்சிநாள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். பெரம்பலூரில் நேற்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதனையொட்டி பெரம்பலூர் கலெக்டர்அலுவலக நுழைவுவாயில் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி, பாலக்கரை வழியாக புதுபஸ்டாண்டு வரை சென்று, பிறகு ரோவர் வளைவு வழியாக அந்தந்த பள்ளிகளில்
நிறைவடைந்தது.

இதில் பெரம்பலூர் புனிததோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தந்தை ஹேன்ஸ்ரோவர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர். ரோவர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டஅலுவலர் ராபின்சன், புனித தோமினிக்பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் வேளாங்கண்ணி ஷெரீன், விமலா ஆகியோர் முன்னின்று வழிநடத்தினர்.
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் இளைஞர் எழுச்சி நாளாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளான நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கு உதவி தலைமை ஆசிரியர் ராஜகுமார் தலைமை வகித்தார். பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பேரணியில் பள்ளி மாணவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பள்ளி மாணவர்கள் கனவுகளை நனவாக்க வேண்டும் என்று கோஷமிட்டவாறு முக்கிய வீதிகள் வழியே பள்ளியில் புறப்பட்டு சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. முன்னதாக ஆசிரியர் ராமதாஸ் வரவேற்றார். இறுதியில் ஆசிரியர் அறிவழகன் நன்றி கூறினார். அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகுகள் (1 மற்றும் 3) சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு  இளைஞர் விழிப்புணர்வு நாள்  கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு கல்லூரி கலையரங்கில் அப்துல் கலாமின் மேம்பாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி  தலைமையேற்று கலாமின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது பல்வேறு சாதனைகளையும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக இளைஞர்களுக்கு அவர் கூரிய சிந்தனைகளையும் மாணவர்களுக்கு கூறினார். சுற்றுச்சூழல் துறைத்தலைவர் அருள், இயற்பியல் துறை பேராசிரியர் ராசமூர்த்தி ஆகியோர் கலாமின் கனவுகளை நிறைவேற்ற மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டுமென்று கூறினர். கருத்தரங்கில், இவ்விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கருணாகரன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்துறை பேராசிரியர் கலைச்செல்வன் நன்றி கூறினார். தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களை கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அதனை தொடர்ந்து அப்துல்கலாமின் சிந்தனைகளை பொதுமக்களிடையே நினைவுகூறும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை கல்லூரி முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி ராஜாஜி நகர், செந்துறை சாலை, பெரிய கடைவீதி வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. மேற்கண்ட நிகழ்ச்சிகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் கருணாகரன், செல்வமணி மற்றும்  தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்மாறன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிகளில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும்  500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Youth awakening day awareness rally ,birthday ,Abdul Kalam ,
× RELATED ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவாஸ்கனி எம்பி தேர்தல் அறிக்கை வெளியீடு