×

அரசு தட்டச்சர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தர்மபுரி, அக்.16: தமிழ்நாடு அரசு தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாநில ெபாது செயலாளர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் ராமமூர்த்தி வரவு செலவு அறிக்கையை வாசித்து ஒப்புதல் பெற்றார். முன்னதாக மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தலில் புதிய மாநில தலைவராக மணி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில பொதுச்செயலாளராக முருகேசன், மாநில பொருளாளராக பரிமளம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகை ரொக்கமாக வழங்க வேண்டும்.

சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு நபர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்த தட்டச்சர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ராமமூர்த்தி, வெங்கடாஜலபதி, தண்டபாணி, மாணிக்கம், காவேரி, கிருஷ்ணன், அன்பழகன், விஜயன், குமரன், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : State Executive Meeting ,State Traders Association ,
× RELATED தஞ்சையில் 22ம் தேதி மாநில செயற்குழு...