×

செந்துறையில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

செந்துறை,அக்.16; செந்துறை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் சரகமான செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது  மருதூர் கிராமம் பேருந்து நிலையம் அருகே சென்ற மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்தி விசாரணை செய்ததில் தெத்தேரி பகுதி வெள்ளாற்றில் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து லாரி டிரைவர்கள் முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி மகன் தர்மராஜ்(30), வெளிப்பிரிங்கியம் கிராமம் மருதமுத்து செந்தில்குமார்(40), கச்சிராயன்பேட்டை வேலாயுதம் மகன் பாலமுருகன்(30), மணல் ஏற்றி அனுப்பியவரும், அதிமுக ஒன்றிய செயலாளர் முள்ளுகுறிச்சி ராஜேந்திரன் மகன் சுரேஷ்(42) ஆகிய 4 பேர் மீது செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளர்.

Tags : quarry ,
× RELATED முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான...