×

மண்டல அளவிலான குடியரசுதின விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர்,அக்.16:  பெரம்பலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் 4 இடங்களில் நடத்தப்பட்டன. இதில் 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்டல அளவிலான குடியரசுதின தடகள விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மட்டும் நடத்தப்பட்டன. இதில் பெரம்பலூர், கரூர், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் 880 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மண்டல அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் நேற்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்பட 4 இடங்களில் நடத்தப்பட்டது.

இதன்படி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோகோ, கால்பந்து, இறகுப்பந்து ஆகிய 3 குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோகோ விளையாட்டு போட்டி மட்டும் ஆண்கள், பெண்கள் என தனித்த னியாக இருபாலருக்கும் நடத்தப் பட்டது. மற்ற விளையாட்டுகள் பெண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டன.  பெரம்பலூர் வெங்கடேச புரத்திலுள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேஸ்க ட்பால் விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கு மட்டும் நடத்தப் பட்டன. வேப்பந்தட்டை தாலுகா, பேரையூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹேண்ட் பால், துரோபால் விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கு மட்டும் நடத்தப்பட்டன. பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் பொறியியல் கல்லூரியில் கபடி, வாலிபால், பூப்பந்து எனப்படும் பால் பேட்மிட்டன் ஆகிய விளையாட்டு போட்டிகள் பெண்களுக்கு மட்டும் நடத்தப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணிய ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார். பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக பணிபுரிந்து மண்டல அளவில் முதல் 2 இடங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளை மாநிலஅளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்தனர். மண்டல அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : level sports tournaments ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...