×

நெட்பால் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

அரியலூர்,அக்,16: அர்யலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  கலெக்டர் விஜயலட்சுமி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 302 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 302 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டப்பட்டது.
மேலும், இந்திய சர்வசேத அறிவியல் மாநாடு 2018ல் உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களையும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டில் விஷன் 2020 டாக்டர் அப்துல்கலாம் விருதினை பெற்ற புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களையும் கலெக்டர் விஜயலட்சுமி பாராட்டினார்.

இந்திய பள்ளி கல்வி குழுமம் நடத்தும் தேசிய அளவிலான நெட்பால் 3 பிரிவுகளாக நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாட அரியலூர் மாவட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 14ம் ஆண்டு மாநில அளவிலான 16 வயதிற்குட்பட்ட நெட்பால் போட்டியில் அரியலூர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இம்மாணவ, மாணவியர்களை மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.

Tags : Netball competition ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது