×

மார்த்தாண்டத்தில் பைப்லைன் துண்டிப்பு 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு

மார்த்தாண்டம், அக். 16: குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில், தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் 11 வார்டுகளும், மேற்கு கரையில் 10 வார்டுகளும் உள்ளன. நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளையில் ேநசமணி பாலத்தையொட்டி அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கிழக்கு கரையோர வார்டுகளுக்கும், மேற்கு கரையில் உள்ள ஒருசில வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குழித்துறை பெண்டு கடவு பகுதியில் உள்ள குடிநீர் கிணறு மூலம் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள ஏனைய வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை நடக்கிறது. மார்த்தாண்டத்தில் மேம்பால பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டும் போது பைப் லைனில் அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது. 21வது வார்டான ஆஸ்பத்திரி வார்டு வழியாக தான் மேம்பாலத்தின் பெரும் பகுதிகள் அமைகிறது.

மார்த்தாண்டம் சந்திப்பு, சிங்ளேயர் தெரு, வெட்டுவெந்நி, கண்ணக்கோடு பகுதிகளை உள்ளடக்கி இந்த வார்டு அமைந்துள்ளது. மார்த்தாண்டம் மார்கெட் பகுதியில் உள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தான் குடிநீர் இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியையொட்டி சாலையில் மேம்பால பணிக்காக 10 தினங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மார்த்தாண்டம், சிங்ளேயர் தெரு, வெட்டுவெந்நி, கண்ணக்கோடு  உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது. நகராட்சி சார்பில் மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், பொதுமக்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நேற்று துண்டிக்கப்பட்ட பைப் ைலன் சீரமைக்கும் பணி நடந்தது.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு