×

இரணியலில் நள்ளிரவு ரயிலில் தனியாக வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் புதருக்குள் அழைத்து சென்ற போது சிக்கினார்

திங்கள்சந்தை, அக். 16: இரணியலில் இளம்பெண்ணை  பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை ரயில்வே ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். புனலூரில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ் பிரஸ் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் இரணியல் ரயில் நிலையம் வந்தது. அதில் இருந்த சில பயணிகள் இறங்கி சென்றனர். அவர்களுடன் ஒரு வாலிபரும், இளம்பெண்ணுடன் இறங்கினார். அந்த வாலிபருக்கு சுமார் 22 ல் இருந்து 25 வயதுக்குள் இருக்கும். அந்த இளம்பெண்ணுக்கு 17 வயதுக்குள் இருக்கும். அந்த இளம்பெண் மிகவும் டிப்டாப் உடையில் பார்ப்பதற்கு கல்லூரி மாணவி போல் இருந்தார். இருவரும் ரயில் நிலையத்தில் இறங்கி சிறிது நேரம், பிளாட்பாரத்திலேயே நின்று கொண்டு இருந்தனர். பின்னர் சுற்றும், முற்றும் பார்த்த அந்த வாலிபர் திடீரென அந்த இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள முட்புதரை நோக்கி நடந்து சென்றார். சிறிது நேரத்தில் இருட்டான பகுதிக்குள் சென்று அந்த இளம்பெண்ணுடன் புதருக்குள் நுழைந்தார்.

இதை தற்செயலாக ரயில் நிலைய கார்டு மற்றும் பணியாளர்கள் சிலர் பார்த்தனர். இளம்பெண்ணுடன் இந்த நேரத்தில் புதருக்குள் ஏன் நுழைகிறார்? என்பதை நோட்டமிடும் வகையில் அவர்கள் அத்திசை நோக்கி சென்றனர். அங்கு அந்த வாலிபர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து ரயில்வே ஊழியர்கள் கூச்சலிட்டனர்.  உடனடியாக அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்து இரணியல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரையும், இளம்பெண்ணையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அந்த இளம்பெண் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் நிலையம் வந்த அவர்களிடம் விசாரித்த போது இளம்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவ்வப்போது வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடி பிடிப்போம் என்றும் கூறினர். இதையடுத்து அந்த இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

அந்த வாலிபர் பற்றி விசாரணை நடத்திய போது அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், ரயிலில் முறுக்கு மற்றும் காபி வியாபாரம் செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இளம்பெண் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அனாதையாக நின்றதை பார்த்ததாகவும், பின்னர் டிக்கெட் எடுத்து ஊருக்கு அழைத்து வந்து வீட்டில் கொண்டு விடுவதற்காகவே  அழைத்து சென்றதாகவும் கூறினார். வீட்டில் கொண்டு விட வேண்டியவரை புதருக்குள் ஏன் அழைத்து சென்றாய்? என கேட்ட போது அந்த வாலிபர் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ரயில்வே கார்டு மற்றும் பணியாளர்கள் பார்க்காவிட்டால், அந்த இளம்பெண்ணை இந்த வாலிபர் சீரழித்து இருப்பார்? என்று போலீசார் கூறினர்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...