×

கோணம் பொறியியல் கல்லூரி முதல்வர் திடீர் மாற்றம்

நாகர்கோவில், அக். 16: நாகர்கோவில் கோணத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் முதல்வராக டி.வி.எஸ். பிள்ளை இருந்து வந்தார். இந்த நிலையில்  திடீரென டிவிஎஸ் பிள்ளை மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய முதல்வராக ரெங்கராஜா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமன உத்தரவை,  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பிறப்பித்துள்ளார்.
கல்லூரி புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ரெங்கராஜா, இதே கல்லூரியில் மின்னியியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவராக இருந்து வந்தார். இவர் 19 ஆண்டு காலம் பேராசிரியர் அனுபவம் பெற்றவர். இவரது தலைமையின் கீழ் 11 மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளனர்.
75க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை, ரெங்கராஜா சர்வதேச கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார். இவர் ஏற்கனவே திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னியியல் துறை புல தலைவராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை திட்டம், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது கோணம் பொறியியல் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரெங்கராஜாவுக்கு சக பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். அவர் கூறுகையில், கோணத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியின் உறுப்பு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்படும். துணைவேந்தர் சூரப்பா அறிவிக்கும் திட்டங்கள், செயல்பாடுகள் உடனுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறந்த கல்லூரியாக மாற அனைத்து பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் பணியாற்றுவேன் என்றார். முதல்வராக இருந்த டி.வி.எஸ். பிள்ளை, இதே கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Tags : engineering college principal ,
× RELATED தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக...