×

59 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்காததால் முஞ்சிறை சித்த மருத்துவ கல்லூரியை முற்றுகையிட்ட மாணவர்கள் ஒட்டு மொத்தமாக பல்கலை தேர்வை புறக்கணித்தனர்

புதுக்கடை, அக். 16: பல்கலை பருவ தேர்வு எழுத 59 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்காததால் முஞ்சிறை சித்த மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்ட மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்தமாக ேநற்றைய தேர்வை புறக்கணித்தனர். புதுக்கடை அருகே முஞ்சிறையில் அகில திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கம் சார்பில், சித்த மருத்துவ கல்லூரி செயல்படுகிறது. எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கடந்த 2015-16ம் கல்வி ஆண்டில் அரசு இடஒதுக்கீட்டை மீறி கூடுதலாக 18 மாணவர்களுடன் மொத்தம் 58 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்வியாண்டு இறுதி தேர்வின்போது 40 பேருக்கு மட்டும் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. 18 பேருக்கு ரிசல்ட் அறிவிக்கப்பட வில்லை. அந்த 18 பேரும் போராட்டங்கள் நடத்தி கலெக்டர், கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பினர். அதன்பின் அவர்களுக்கான தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்ஷீட் வழங்கப்படவில்லை. அதுபோல் 2016-17ம் கல்வி ஆண்டிலும் தேர்வு எழுதிய யாருக்கும் தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்ைல என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வருட பருவ தேர்வு நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2ம் வருட மாணவ, மாணவிகள் 41 ேபர் மற்றும் 3ம் வருட மாணவ, மாணவிகள் 18 பேர் என மொத்தம் 59 பேருக்கு ஹால் டிக்ெகட் வழங்கவில்லை.
இது சம்பந்தமாக கடந்த 9ம் தேதி மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப்போது அனைவருக்கும் தேர்வு எழுத அனுமதி கிடைத்துவிடும் என தெரிவித்தனர். ஆனால் யாருக்கும் ஹால் டிக்கெட் கிடைக்க வில்லை. மீண்டும் கடந்த 13ம் தேதியும் மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசினர். அப்போது, ஹால்டிக்கெட் வராததால் 59 பேரும் தேர்வு எழுத முடியாது என தெரிவித்தனர். அதேவேளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் ஒரு மாதத்தில் அனைவருக்கும் தேர்வு எழுத அனுமதி கிடைத்துவிடும் என கூறினர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று பல்கலைக்கழக தேர்வு தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை 8 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளும், பெற்றோரும் கல்லூரி நுழைவு வாயில் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரியில் உள்ள ஏனைய மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். ஒருகட்டத்தில் மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலை பூட்டினர். மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். ராஜேஷ்குமார் எம்எல்ஏ கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாத வகையில் பல்கலைக்கழக தேர்வை மாற்றிவைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் மதியத்திற்கு பிறகும் தொடர்ந்தது. இதையடுத்து விளவங்கோடு உதவி தாசில்தார் அனிதா, கன்னியாகுமரி டிஎஸ்பி முத்துபாண்டி ஆகியோர் கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் ராஜேஷ்குமார் எம்எல்ஏ மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்தமாதத்திலேயே எந்த மாணவர்களும் பாதிக்காத வகையில் தேர்வு எழுதுவதற்கு அனுமதி பெற்றுதரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்துமாலை 5 மணியளவில்போராட்டம்கைவிடப்பட்டது. மாணவர்களின் போராட்டத்தால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : university ,Munichai Siddha Medical College ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...