×

ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யவேண்டும் வசந்தகுமார் எம்.எல்.ஏ பேட்டி

நாகர்கோவில், அக்.16: ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்நோக்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ தெரிவித்தார். காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் இதனை மத்திய அரசும் செய்யவில்லை. அவரும் பதவி விலகவில்லை.

மத்திய அமைச்சரே பெண்களை கெடுக்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக முதல்வர் மீது நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்றமே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து கொண்டு ஊழல் வழக்கை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பது முதல்வர் பதவிக்கு அழகல்ல. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்ைக சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Palanisamy ,Chief Minister ,CBI ,interview ,Vasanthakumar ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...