×

புகழூரான் வாய்க்காலில் காகித கழிவு கலப்பதால் குடிநீர் மாசு

கரூர், அக். 16: புகழூரான் வாய்க்காலில் காகித கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை சம்பந்தமான மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இதில், மண்மங்கலம் தாலுகா காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் புகளூர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வழங்கிய மனுவில், புகளூர் வாய்க்காலில் மழைக்காலங்களில் காகித ஆலை விஷக்கழிவு நீர் முழுவதுமாக திறந்து விடப்படுகிறது. தற்போது 15 நாள் வாய்க்காலில் ஆலை கழிவு நீர் வருகிறது. மேலும், வளமான புகளூர் வாய்க்கால் மற்றும் வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்காலில் கலந்து இந்த வாய்க்கால் பாசனம் வளமாக பூமியாக இருந்தது. தற்போது, கலர் மாறி வருவதால் கோரையை தவிர மற்ற பயிர்கள் வளராத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தோட்டக்குறிச்சியில் இருந்து நெரூர் வரை ஆடு, மாடு, மக்களுக்கு குடிநீர் கிடைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் புகழூரான் வாய்க்காலில் காகித கழிவு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா