×

குளித்தலை தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

குளித்தலை, அக்.16: குளித்தலை தொகுதியில் நடந்த வாக்காளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை எம்எல்ஏ ராமர் ஆய்வு செய்தார்.
குளித்தலை தொகுதியில் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் மற்றும் மருதூர் நங்கவரம் பேரூராட்சி ஆகிய பகுதியில் மொத்தம் 269 வாக்குசாவடிகள் உள்ளன.தேர்தல் ஆணையம் மூன்று கட்டங்களாக வாக்காளர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்து சிறப்பு முகாம் நடத்தியது. அதில் 3ம் கட்டமாக நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல் முகாம் குளித்தலை தொகுதிக்குட்பட்ட 269 வாக்குசாவடிகளில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் தங்களுடைய ஓட்டுரிமையை நிலைநாட்ட ஆர்வத்துடன் விண்ணப்பங்கள் அளித்தனர். இந்த சிறப்பு முகாம் நடைபெற்ற குளித்தலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடிக்கு எம்.எல்.ஏ ராமர் நேரில் சென்று வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகவரி மாற்றம் குறித்து, அந்தந்த வாக்குசாவடி அலுவலரிடம் விளக்கம் கேட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் உமாபதி, சந்திரன் நிர்வாகிகள் மெடிக்கல் மாணிக்கம், வக்கீல் சாகுல்அமீது, தமிழரசன், சலாவுதீன், சரவணன், பிரசாந்த், அருண்மொழி, முருகேசன், மாணிக்கம் உள்பட பலர்
உடனிருந்தனர்.

Tags : constituency ,Voter List Amendment Camp ,Bathinda ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...