×

சுத்தமான உணவு வகைகளை மட்டுமே பயன்படுத்துவோம்

க.பரமத்தி, அக்.16:  சுத்தமான சுகாதாரமான உணவு வகைகளை மட்டுமே பயன்படுத்துவோம் என கார்வழி தொடக்கப்பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல் வழிகாட்டுதலின்படி க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக கைகள் கழுவும் தினவிழா நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் வரவேற்றார். அன்னையர் குழு உறுப்பினர் புவனேஸ்வரி பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்து பேசுகையில், கைகள் கழுவுதல் பற்றிய செயல் முறை விளக்க பயிற்சியினை மாணவ, மாணவிகளுக்கு அளித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களும் முறையாக கை கழுவினர்.

பின்னர் அசுத்தமான சுகாதாரமான உணவு வகைகளை மட்டுமே பயன்படுத்துவோம் என மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கரூர், அக். 16: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ரேடியோதெரபி டெக்னீசியன் பணி காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிஎஸ்சி ரேடியோ தெரபி டெக்னீசியன் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த காலிப்பணியிடத்திற்கு வயது வரம்பு 1.7.2018 அன்று தாழ்த்தப்பட்ட வருப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உச்ச வயது வரம்பு இல்லை. பகிரங்க போட்டியாளர்களுக்கு (ஒசி) உச்ச வயது வரம்பு 30 ஆகும். ரேடியோதெரபி டெக்னீசியன் காலிப்பணியிடம் இந்த கல்வித்தகுதிக்கு உட்பட்ட பதிவுதாரர்கள் அக்டோபர் 17ம்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் 5மணிக்குள் அனைத்து அசல் கல்விச்சான்றுகள், சாதிச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கரூர் வெண்ணைமலையில் உள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் .

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு