×

ஒரு வார இடைவெளிக்கு பிறகு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, அக். 16: ஈரோடு மாவட்டத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று இடைவெளி விட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், அணைக்கட்டுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு ஒரு சில நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.   நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு: பவானிசாகர், சத்தி, கொடிவேரி உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 மி.மீ., ஈரோடு, அரச்சலூரில் தலா 2 மி.மீ, வரட்டுப்பள்ளம் 37, கோபி 10, கவுந்தப்பாடி 42, பெருந்துறை 4.5, கொடுமுடி 5.6, சென்னிமலை 17, மொடக்குறிச்சி 16, ஓலப்பாளையம், புங்கம்பாடி தலா 15, சிவகிரி 5, மங்களப்பட்டி 45, எலந்தைகுட்டை மேடு 3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம். பவானிசாகர் 101.99அடி, குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு 41.95 அடி, பெரும்பள்ளம் 18அடி, வரட்டுப்பள்ளம் 27.66 அடியாகவும் உள்ளது.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...