×

குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் மனு

தேனி, அக். 16: தேனி கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தங்கள் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு குன்னூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இங்கு தண்ணீர் விநியோகம் இல்லை. குடிநீருக்காக ஏற்கனவே போடப்பட்ட ஆள்துளைக்கிணறு அடிபம்பும் பழுதாகி உள்ளது. இப்பம்பை சீர்செய்தால் தண்ணீர் கிடைக்கும். குடிநீருக்காக அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே, கலெக்டர் இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது