×

எட்டுவழிச்சாலை, நியூட்ரினோ திட்டங்களை கைவிட வேண்டும் கிராமப்புற பெண்கள் விழாவில் வலியுறுத்தல்

தேனி, அக். 16: கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள எட்டுவழிச்சாலை, நியூட்ரினோ போன்ற திட்டங்களை அரசு கைவிட வேண்டும் என பெண்கள் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ச ர்வதேச கிராமபுற பெண்கள் தினத்தையொட்டி தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் தேனியில் நேற்று கிராமப்புற பெண்கள் விழா நடத்தப்பட்டது. விழாவிற்கு சமம் குடிமக்கள் இயக்க மாநில தலைவர் ராசன் தலைமை வகித்தார். தமிழ் மாநில பெண்கள் இயக்க செயலாளர் சுந்தரம்மாள் வரவேற்றார். விஜயா, கருத்தம்மாள்முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்மாநில பெண்கள் இயக்கத்தை சேர்ந்த அருண்மொழி, ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம் இயக்குநர் சாபுசைமன்,

சமம் குடிமக்கள் இயக்க மாநில ஆலோசகர் அருள்ராஜ், தேனி சுடர் பெண்கள் இயக்க ஆலோசகர் முருகேசன் ஆகியோர் பேசினர். இவ்விழாவில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை தேவையான நீர்ஆதாரங்களை பாதுகாக்கவும், தூர்வாறவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மணல் கொள்ளையை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற பெண்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பெண்களின் வளர்ச்சிக்கு எதிரான எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...