சின்னசேலம், அக். 16: சின்னசேலம் அருகே வீ.மாமந்தூர்

கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்(60). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் குடும்பத்திற்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்ரமணியின் ஆதரவாளர் தூண்டியின் நிலத்தில் முருகேசன் மாடு மேய்ந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தூண்டி, பாரதிராஜா, வல்லரசு, கலியன் ஆகியோர் சேர்ந்து முருகேசனிடம் நியாயம் கேட்டுள்ளனர்.

 அப்போது முருகேசன், அவரது மனைவி இன்பரசி, தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், தூண்டி, பாரதிராஜா, வல்லரசு, கலியன் ஆகியோரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாரதிராஜா கொடுத்த புகாரின்பேரில் முருகேசன், அவரது மனைவி இன்பரசி, தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை(60) கைது செய்தனர்.

அதைபோல முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் தூண்டி, பாரதிராஜா, வல்லரசு, கலியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தூண்டி(49), வல்லரசு(19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஆனத்தூர் ஏரியில் மணல் கடத்திய 10 பேர் கைது

திருவெண்ெணய்நல்லூர், அக். 16: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூர் ஏரிக்கரையில் இருந்து தினமும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், ேநற்று திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, ஆனத்தூர் ஏரிக்கரையில் இருந்து மணல் கடத்தி வந்த 10மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். பின்னர் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பரணி(34), கலியமூர்த்தி மகன் ஆனந்தன்(28).

 ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(30), வைத்தி மகன் கூத்தப்பன்(28), ஐயனார் மகன் மகாதேவன்(34), சுப்பிரமணியன் மகன் முருகன்(39), காசிநாதன் மகன் நாகராஜன், ராமச்சந்திரன்(57), தங்கராசு மகன் மோகன்ராஜ்(50), சடையன் மகன் சங்கர்(47) என தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். மேலும், 10 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: