×

தேனி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களாக சேர்க்க 10 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பம்

தேனி, அக்.16: தேனி மாவட்டத்தில் இதுவரை புதிதாக வாக்காளர்களாக சேர்க்கக்கோரி 10 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி தற்போது நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான படிவத்தினை ஆண்டிபட்டி தொகுதியில் 2 ஆயிரத்து 802 பேரும், பெரியகுளம் தொகுதியில் 2 ஆயிரத்து 305 பேரும்,போடித்தொகுதியில் 2 ஆயிரத்து 925 பேரும், கம்பம் தொகுதியில் 2 ஆயிரத்து 19 பேருமாக மொத்தம் 10 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கலுக்கான படிவத்தை ஆண்டிபட்டி தொகுதியில் 168 பேரும், பெரியகுளம் தொகுதியில் 68 பேரும்,போடித்தொகுதியில் 436 பேரும், கம்பம் தொகுதியில் 331 பேருமாக மொத்தம் 1ஆயிரத்து 3 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விபரம் திருத்தலுக்கான விண்ணப்பத்தை ஆண்டிபட்டி தொகுதியில் 265 பேரும், பெரியகுளம் தொகுதியில் 276 பேரும், போடித்தொகுதியில் 297 பேரும், கம்பம் தொகுதியில் 221 பேருமாக மொத்தம் 1ஆயிரத்து 59 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை ஆண்டிபட்டி தொகுதியில் 163 பேரும், பெரியகுளம் தொகுதியில் 223 பேரும், போடித்தொகுதியில் 214 பேரும், கம்பம் தொகுதியில் 280 பேருமாக மொத்தம் 880 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags : district ,Theni ,voters ,
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி