×

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண்களை போலீசார் விரட்டியதால் பரபரப்பு

தேனி, அக். 16: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் மனு கொடுக்க வந்த பெண்களை போலீசார் விரட்டியதில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடப்பது வழக்கம். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பொதுமக்கள் மனுக்களை அளிப்பர். நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் இரு பெண்கள் மனு அளித்து விட்டு கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இப்பெண்களை திடீரென அங்கிருந்த போலீசார் ஓடி விரட்டிச் சென்று மடக்கி நிறுத்தினர். இதில் பதற்றமடைந்த இரு பெண்களும் என்ன, ஏதுவென அறியாமல் திகைத்தனர். பின்னர் போலீசார் அப்பெண்களிடம் கடந்த வாரம் தேனியில் ஒரு தனியார் நகைக்கடையில் நகை வாங்க வந்தது போல ஏமாற்றி நகை திருடிச் சென்ற பெண்கள் என எண்ணி விரட்டி வந்ததாக தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கு சற்று முன்பாக இதே கலெக்டர்அலுவலகத்திற்கு போடியில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுவில் மோசடி நடந்துள்ளதாக புகார் தெரிவிக்க வந்த ஒரு பெண்ணையும் போலீசார் மறித்து, நீ எந்த மாநிலத்தை சேர்ந்தவள், உன்னுடன் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என கேள்விகேள்வி கேட்டனர்.இதில் பதற்றமடைந்த அப்பெண், `என்னை ஏன் இப்படி கேட்கிறீர்கள். நான் கலெக்டரிடம் புகார் மனு அளிக்க வந்துள்ளேன் ‘ என்றும் கூறியும் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். இதன்பின்னர், அப்பெண் மனு கொடுக்கத்தான் வந்திருப்பது உறுதியாளதும் போலீசார் அப்பெண்ணை விடுவித்தனர். இதுகுறித்து விசாரித்த போது, கடந்த வாரம் தேனியில் பிரபல நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல நடித்து ஏமாற்றி ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற பெண்கள், கோட்டூரைச் சேர்ந்தவர் என்பதால்.

அந்த ஊரில் இருந்து வந்த பெண்களை போலீசார் விரட்டிச் சென்றதும் தெரிய வந்தது. இதேபோல, நகைத் திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் சுடிதார் அணிந்திருந்தார் என்பதால், நேற்று மகளிர் சுயஉதவிக்குழு குறித்து புகார் கொடுக்க வந்த போடியை சேர்ந்த பெண்ணையும் தவறாக புரிந்து கொண்டு போலீசார் நடந்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவங்களால கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : women ,office ,Theni ,collector ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது