பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

சின்னசேலம், அக். 16: சின்னசேலம் அருகே நயினார்பாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சோழன்(34). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது சின்னசேலம் அருகே நல்லசேவிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(25), ஈரியூர் செல்வம்(28) ஆகிய இருவரும் காரில் டீசல் போட சென்றனர்.  அப்போது இரவு நேரம் என்பதால் டீசல் போடமுடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார்(25), செல்வம்(28) ஆகிய இருவரும் சோழனை அசிங்கமாக திட்டி உள்ளனர். இதில் பயந்துபோன சோழன் பங்க் அலுவலகத்தில் நுழைந்து கதவை சாத்திக்கொண்டார். அப்போது செந்தில்குமார், செல்வம் இருவரும் கல்லால் கதவு கண்ணாடியை உடைத்துள்ளனர்.  இதனால் வெளியே வந்த சோழனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சோழன் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார்(25), செல்வம்(28) ஆகிய இருவரையும் கைது செய்தார்.

மாட்டு வண்டி மீது பைக் மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி

திருவெண்ணெய்நல்லூர், அக். 16:   திருவெண்ணெய்நல்லூர் அருகே மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். பைக்கை ஓட்டி வந்த பேராசிரியர் படுகாயம் அடைந்து மருத்துவ

மனையில் சிகிச்சை பெற்று

வருகிறார்.

 சென்னை விருகம்பாக்கம் வேம்பம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகள் சாய்மனஷா (20), பேஷன் டெக்னாலஜி மாணவி. இவர் தனது பேராசிரியரான சென்னை

வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த பாபு மகன் திலீப்(30) என்ப

வருடன் சென்னையில் இருந்து தேனிக்கு பைக்கில் சென்றார். இவர்கள் கல்லூரியை சேர்ந்தவர்கள் ஒரு வேனில் தேனிக்கு சுற்றுலா சென்ற நிலையில் இவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் அரசூர் தனியார் பொறியியல் கல்லூரி எதிரே நேற்று காலை அவர்கள் சென்றபோது, எதிரே வந்த மாட்டு வண்டி மீது பைக் மோதியது. இதில் சாய்மனஷா தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 பைக்கை ஓட்டி வந்த திலீப் தோள்பட்டையில் படுகாயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்ைத சரி செய்தனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்ற 2 பெண் கைது

Related Stories: